அறிந்து கொள்வோம்: இரயில் நிலையம் பாதகை

272



MSL என்ற வார்த்தை எங்காவது கேள்வி பட்டு இருக்கீங்களா? இதுவரை பார்த்தது அல்லது கேள்விப்பட்டது இல்லையென்றால், இனிமேல் எப்போதாவது ரயில் நிலையங்கள் செல்லும்போது ரயில் நிலையத்தில் உள்ள இதுபோன்ற ஊர் பெயர் போர்டு பாருங்கள். நமது நாட்டில் ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள ஊரின் பெயர் போர்டுகளில் ஆங்கிலம் ஹிந்தி மற்றும் அந்த மாநிலத்தின் உள்ளூர் மொழி ஆகிய மூன்று மொழிகளில் ஊர் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

ஊர் பெயரின் போர்டில் அடிப்பகுதியில் MSL என்று குறிப்பிடப்பட்டு சில எண் அளவுகள் குறிப்பிடப் பட்டிருக்கும். அது வேறு ஒன்றுமில்லை. அந்த ரயில் நிலையம் அருகில் உள்ள கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் அமைந்துள்ளது என்பதைக் குறிக்கும் அளவு ஆகும். ஆங்கிலத்தில் அதனை MEAN SEA LEVEL என்று குறிப்பிடுவார்கள். அதனுடைய சுருக்கமே MSL.

நாம் கடலுக்கு அருகாமையில் இருப்பதால் நமது MSL அளவு (மீட்டரில் குறிப்பிட்டால்)இரண்டு இலக்க எண்களில் இருக்கும். இதுவே வடக்கே செல்லச் செல்ல MSL அளவு அதிகரிக்கும். கடல் மட்டத்தில் இருந்து நாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்பதை வைத்து பயணிகள் நமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம். ரயில் எஞ்சின் ஒட்டுனர்களும் MSL அளவுக்கு ஏற்ப ஏற்றம் அல்லது இறக்கங்களில் ரயில் என்ஜின் வேகத் திறனை கூட்டிக் குறைத்துக் கொள்வார்கள்.

அடுத்த முறை ரயில்வே ஸ்டேஷன் போகும் போது கண்டிப்பாக உங்கள் MSL என்னவென்பதை அறிந்து கொள்ளுங்கள்.