புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை தளவாயாக கொண்டு செயல்படும் ஊர்க்காவல் படையில் உள்ள காலியிடங்களை நிரப்ப தன்னார்வ தொண்டு உள்ளம் படைத்த ஆண் / பெண் இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழ்க்கண்டயுள்ள தகுதியுடையவர்கள் 28.09.2022 முதல் 30.09.2022 வரை 3 நாட்கள் காலை 10.00 மாலை 05.00 மணி வரை கல்விச்சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு நேரில் வரவும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
(ஊர்க்காவல் படை அலுவலகம் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பின்புறம், பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ளது)
தகுதிகள்:
1. பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
2. வயது வரம்பு 20 முதல் 45 வரை.
3.உடற்தகுதிகள் – காவல்துறையைப் போன்றது.
4. குற்ற வழக்குகளிலோ, அரசியல் கட்சிகளிலோ சம்பந்தப்பட்டவர்களாக இருக்கக்கூடாது.
தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தாங்கள் தற்போது ஈடுபட்டுள்ள பணிகளுக்கு இடையூரின்றி செயல்படலாம். இப்பணிக்கு மாதஊதியம் எதுவும் இல்லை. பணிநாட்களுக்கு உரிய படித்தொகை மட்டும் பெற்றுத்தரப்படும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.