மராட்டிய மாநில
7-ம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம்பெற்ற புதுக்கோட்டை மாணவி

11366

சமூக அக்கறைக்கு கிடைத்த அங்கீகாரம்

புதுக்கோட்டை மாவட்டம், திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர் பி.ஏ. வரலாறு படித்து வருகிறார். இவர் புதுக் கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1படித்த போது அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்று நாசாவை (விண் வெளி ஆராய்ச்சிமையம்) பார்வையிட தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதற் கான பயணச்செலவை மாணவி ஏற்க வேண்டும் என கூறிய நிலையில், பலரும் மாணவிக்கு உதவி செய்தனர்

நாசாசெல்லும் புதுக்கோட்டைமாணவி ஜெயலட்சுமியின் சமூகப்பார்வை

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்லவுள்ள மாணவி ஜெயலட்சுமியின் சமூக அக்கறையான செயல்பாடு அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையைச் சேர்ந்த இந்த பிளஸ் 2 மாணவி, அமெரிக்காவில் உள்ள நாசா கென்னடி வின்வெளி ஆய்வு மையத்தைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பைப் பெற்றவர். கொரானாவால் பயணம் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. மிகவும் வறுமையில் இருக்கும் இந்த பெண்ணின் அமெரிக்கப் பயணத்திற்கு பல்வேறு நபர்கள் அமைப்புகளிடமிருந்து தேவையான நிதி கிடைத்துள்ளது.

அவ்வாறு இவருக்கு உதவி செய்ய வந்தவர்கள்தான் #கிராமாலயா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம். அத்தொண்டு நிறுவனத்திடம் எனக்கு போதிய நிதி சேர்ந்துவிட்டது, ஆனால், எங்கள் கிராமத்தில் உள்ள வீடுகளில் #கழிவறை வசதி கிடையாது. பெண்கள் மிகவும் அவதிப்படுகிறோம்.எனவே எங்களுக்கு கழிவறை கட்டித் தர ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

கிராமத்திற்கு நேரடியாக வந்து பார்த்த கிராமாலயா நிறுவனர் ஜி.தாமோதரன் அதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். தற்போது 120 வீடுகளுக்கு கழிவறைகள் கட்டிக்கொடுக்கப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு வீடாகச் சென்று கழிவறையின் அவசியத்தைப் பற்றிப் பேசி, ஒவ்வொருவரையும் ரூ.5000 மதிப்பிலான பொருளையோ, உழைப்பையோ வழங்கக் செய்து ரூ.25,000 மதிப்பிலான வசதியான கழிப்பறைகளை பெற்றுத் தந்திருக்கிறார் இந்த ஜெயலட்சுமி.

இது குறித்து, புதுக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர், பேராசிரியர் சா. விஸ்வநாதன் கூறியது: தந்தையை இழந்த இவர் ,மன நலம் பாதிக்கப்பட்ட தாய், தம்பி மூவரும் தன் சித்தப்பாவின் பராமறிப்பில் இருக்கிறார்கள். ஆதனக்கோட்டையில் முந்திரி பருப்பு தயாரிப்பு குடிசைத் தொழில். அதில் இவரும் இவர் தம்பியும் வேலை செய்து தங்களது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

இந்த நிலையிலும், சமூக அக்கறையுடன் இவர் தனது கிராமத்துக்குச்செய்திருக்கும் பணி மெச்சத்தகுந்தது. புதுக்கோட்டையில் இவரைச் சந்தித்து, பெண்கள் முன்னேற்றம் தொடர்பான தினமணியின் மகளிர் மணி தொகுப்பு, காந்தியின் சத்திய சோதனை உட்பட பல நூல்களையும் அன்பளிப்பாக வழங்கி பாராட்டும் வாய்ப்பு கிடைத்தது என்றார்.

என கூறிய நிலையில், பல மேலும் அதற்கான முழு தொகையும் கிராமலாயா என்ற தொண்டு நிறுவனம் வழங்க முன் வந்தது. அப்போது தனக்கு தேவையான தொகை கிடைத்து விட்டது என்று தொண்டு நிறுவனத்திடம் மாணவி கூறினார். இதையடுத்து தொண்டு நிறுவனம் வேறு ஏதாவது உதவி வேண்டும் எனில் கேளுங்கள் என்றதும், மாணவி எங்கள் ஊர் மக்கள் பலர் கழிவறை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் வீட்டுக்கு ஒரு தனிநபர் கழிவறை கட்டிக் கொடுங்கள் என்று கூறினார். இதைய டுத்து கிராமலாயா தொண்டு நிறுவனம் 126 வீடுகளுக்கு கழிவறை கட்டி கொடுத்தது. இதனால் இந்த மாணவியை பலரும் பாராட்டி னர். ஜெயலட்சுமியின் இத்தகைய செயல்பாடுகள் குறித்து மராட் டிய மாநிலத்தில் 7-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் கனவு மெய்ப்படும் எனும் தலைப்பில் நான்கு பக்கத்தில் இதுசம்பந்த மான பாடம் இடம்பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவியின் சமூக அக்கறையானது மராட்டிய மாநிலத் தில்பாடமாக அமைந்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து மாணவி ஜெயலட்சுமி கூறுகையில், மராட்டிய மாநில பாடநூல் கழகம் மற்றும் பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தின் 7-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் என்னைப் பற்றி பாடம் இடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.