நார்த்தாமலை திருவிழா

811

கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் கோலாகலமாக நடந்த நார்த்தாமலை தேர்திருவிழா ஆயிரக்கணக்கில் அணிவகுத்த பக்தர்கள் திணறிய திருச்சி சாலை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது தேர் திருவிழாவை முன்னிட்டு நார்த்தாமலை சுற்றியுள்ள அன்னவாசல் கீரனூர்,விராலிமலை,இலுப்பூர், மாத்தூர்,மண்டையூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கடந்த சில தினங்களாக விரதமிருந்து இன்று காலை முதல் பால் குடம் எடுத்தும் அலகு குத்தியும் பறவைக்காவடி எடுத்து கோவிலை நோக்கி அலை அலையாக அணிவகுத்து வந்தனர்.

இதேபோல் கரும்பில் தொட்டில் கட்டி குழந்தையை வைத்து ஊர்வலமாக கொண்டு வந்து பொங்கல் வைத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர் பங்குனி திருவிழாவின் சிறப்பம்சமாக இன்று தேரோட்டம் நடைபெற்றது.

இன்று மதியம் நார்த்தாமலை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் நடைபெற்றது தேரோட்டத்தில் அரோகரா கோஷம் எழுப்பியவாறு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர் ரத வீதிகளில் சுற்றி வந்தன் தேரானது இறுதியாக தேர் நிலையை அடைந்தது தேரோட்டத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்