ஆவுடையார்கோவிலில் குடிபோதை மற்றும் வெப்பஅலையின் தாக்கத்தால் இளைஞர் பலி!

970

கடந்த பத்து நாட்களாக ஆவுடையார்கோவில் பகுதியில் சுமார் 100° பாரன் ஹூட்டிற்கு மேலே சூரியவெப்பம் உள்ளதால் வெப்ப அலை வீசி வருகிறது. இந்நிலையில் ஆவுடையார்கோவில் குறிச்சிகுளம் ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அருகாமையில் உள்ளகுளத்தில் இறந்த நிலையில் ஒருவர் கிடப்பதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து  ஆவுடையார்கோவில் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் கமலகுடி கிராமத்தை சேர்ந்த மாணிக்கவாசகம் வயது 34 என்பது தெரிய வந்தது, உடனே அவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்கள்,

அதைத்தொடர்ந்து அவரின் உடல் உடல்கூறு ஆய்வுக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில்வைக்கப்பட்டுள்ளது.

மாணிக்கவாசகம் இறப்பு குடியினாலா?அல்லது அதிக வெப்ப அலை வீசுவதாலா? என்று உடற்கூறு ஆய்வுக்குப் பின்பே தெரிய வரும் எனவே மர்மமான முறையில் இளைஞர் இறந்து கிடந்தது ஆவுடையார்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.