இன்னொரு செட்டில்மென்ட்! லோகேஷுக்கு Lexus சொகுசு காரை பரிசளித்த கமல்…
விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன் லெக்சஸ் சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார்.
விக்ரம் படம் வெளியான 4 நாட்களில் 175 கோடி ரூபாய் வசூல் செய்து இந்த ஆண்டு இதுவரை வெளியான தமிழ் படங்களிலேயே மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய படமாக மாறி உள்ளது.
நேற்று லோகேஷை பாராட்டி கடிதம் ஒன்றை கமல் எழுதியிருந்தார். இதனை லைஃப் டைம் செட்டில்மென்ட் என்று கூறியிருந்த லோகேஷுக்கு இன்னொரு செட்டில்மென்ட் செய்யப்பட்டுள்ளது.
விக்ரம் படம் உலகம் முழுவதும் தாறுமாறாக ஓடிக் கொண்டிருப்பதால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கமல் அதிக எமோஷனாக உள்ளார். படத்தின் மீதான நம்பிக்கையால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டீன் ஏஜ் பையனைப் போன்று புரொமோஷன பணிகளில் ஈடுபட்டிருந்தார் கமல்.

சமீப காலத்தில் இந்த அளவுக்கு மாஸ்ஸான காட்சிகளில் கமல் நடித்ததில்லை என்று கூறும் வகையில் விக்ரம் படத்தில் கமலுக்கான காட்சிகள் அமைந்தன.
குறிப்பாக இன்டர்வெல் ப்ளாக்கில் திரையரங்குகள் அதிர்ந்து கொண்டிருக்கின்றன. ஹீரோவின் ரசிகனாக இருந்து அவரை இயக்கும்போது, படம் வேற லெவலில் இருக்கும் என்பதை லோகேஷ் நிரூபித்துள்ளார்.

கமலுக்கு சமீப ஆண்டுகளில் கிடைக்காத மிகப் பெரும் வரவேற்பையும், புகழையும் விக்ரம் படம் பெற்றுத் தந்துள்ளது.
பாட்டு, ஃபட், சென்டிமென்ட், எமோஷன், ஹியூமர் சென்ஸ் என அனைத்து டிபார்ட்மென்டிலும் கமல் தெறிக்க விட்டிருப்பார். இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது லோகேஷின் இயக்கம்.
இந்நிலையில் லோகேஷுக்கு விலை உயர்ந்த லெக்சஸ் காரை கமல் பரிசாக அளித்துள்ளார். லெக்சஸ் காரின் குறைந்த வேரியன்டின் விலை ரூ. 60 லட்சத்திலிருந்து ஆரம்பமாகி ரூ. 2.50 கோடி வரை செல்கிறது.

| #Vikram #KamalHaasan | #LokeshKanagaraj | #cargift