உரிமை கோரப்படாத வாகனங்களின் ஏல அறிவிப்பு!!

1958

புதுக்கோட்டை காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்களின் ஏல அறிவிப்பு !

புதுக்கோட்டை மாவட்டத்தில்
உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத கேட்பாரற்ற நிலையில் இருத்த 10 நான்கு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம் மற்றும் 355 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 366 வாகனங்கள் வருகின்ற 29.03.2022-ம் தேதி காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர் வருகின்ற 28.03.2022-ம் தேதி மாலை 5 மணி வரை புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ளலாம்.

மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் அன்றே (28.03.2022-ம் தேதி) ரூ.100/- முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் எடுத்த உடன் முழு தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (GST இருசக்கர வாகனங்களுக்கு 12% மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18%) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்று கொள்ளலாம் என புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பானர் திருமதி, நிஷா பார்த்திபன், ஐ.பி.எஎஸ்., அவர்கள் தெரிவித்துள்ளார்.