National Highway New numbering system.

315

தேசிய நெடுஞ்சாலை புதிய எண் அமைக்கும் முறை.

பலருக்கு குழப்பம் ஆன விஷயம் எப்படி நமது சென்னை சாலை NH 45C யில் இருந்து NH 36 ஆனது என்று!.

காரணம் இதற்கு முன்பு இருந்த நடைமுறையில் எண் வழங்கும் முறை எந்த ஒரு முறையும் இல்லாமல் இருந்து வந்தது. இதனால் ஏகப்பட்ட குழப்பம், மேலும் வாகன ஓட்டிகள் தாங்கள் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையை எளிதில் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது.

இதற்காக தான் 2010 ஆம் MORTH (Ministry of Road Transport and Highway) ஒரு புதிய முறை கொண்டு வந்தது. அதன் படி தேசிய நெடுஞ்சாலை எண்கள் அவற்றின் வழித்தடம் முறைப்படுத்தப்பட்ட பிறகு புதிய எண்கள் வழங்கப்பட்டது.

அதன் படி.

1. ஒற்றை படை எண்கள்.

2. இரட்டை படை எண்கள்.

3. மூன்றிலக்க எண்கள்.

4. மூன்றிலக்க எண்கள் இறுதியில் ஆங்கில எழுத்துக்கள்.

போன்ற முறையில் நெடுஞ்சாலைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன..

ஒற்றைப்படை எண்கள் கொண்ட தேசிய நெடுஞ்சாலை.

இந்த ஒற்றை படை எண்கள் கொண்ட சாலைகள் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் வண்ணம் இருக்கும்.

NH 81: சிதம்பரம் – கோவை நெடுஞ்சாலை.

கிழக்கே சிதம்பரத்தில் தொடங்கி மேற்கு கோவையில் முடியும்.

NH 83: நாகை – கோவை.

கிழக்கே நாகையில் தொடங்கி மேற்கே கோவையில் முடியும்.

ஒற்றை படை எண்கள் கொண்ட சாலைகள் என்றால் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் நெடுஞ்சாலை புரிந்தது. ஆனால் இந்த எண், அதாவது 81 மற்றும் 83 எப்படி வழங்கப்பட்டது என்றால் .

நாடு முழுவதும் இதே போல கிழக்கு தொடங்கி மேற்கு முடியும் சாலைகள் அதிகம் இருக்கும். அவற்றை மேல் இருந்து கீழ் ஆக வரிசை படுத்தி வருவார்கள்.

நம் நாட்டின் மேல் பகுதி ஜம்மு அதே போல கீழ் பகுதி தமிழ்நாடு. ஆகவே ஜம்முவில் இந்த ஒற்றை படை எண்கள் கணக்கு தொடங்கப்படும். NH 1,3 என தொடங்கும்.

நம் தமிழ்நாடு வரும் போது NH 77,79,81,83,85,87 என வரும்.



அடுத்து இரட்டை படை எண்கள் கொண்ட நெடுஞ்சாலைகள்.

இந்த சாலைகள் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் சாலை.

NH 32; சென்னை – தூத்துக்குடி.

NH 36: விக்கிரவாண்டி – மானாமதுரை.

NH 38: வேலூர் – தூத்துக்குடி.

வடக்கு தெற்கு ஆக இருக்கும் சாலைகள் இரட்டை எண்கள் கொண்டு இருக்கும். அதே போல கிழக்கு மேற்கு ஆக இருக்கும் சாலை ஒற்றை எண்கள் கொண்டு இருக்கும்.

சரி இந்த வடக்கு தெற்கு சாலைகளுக்கு இரட்டை எண்களின் இப்படி எண்கள் வழங்கப்படுகிறது என்றால்,

இதில் வலம் இருந்து இடதுபுறமாக ஆக எண்கள் வழங்கப்படும்.

அருணாச்சலப்பிரதேசம் பகுதியில் இருந்து எண்கள் வழங்கப்பட்டு குஜராத் மாநில என்று இந்த இரட்டை இழக்க எண்கள் வழங்கப்படும்.

NH 32 தேசிய நெடுஞ்சாலை ஆனது நமது NH 36 க்கு வலது புறம் இருப்பதையும், NH 38 சாலைக்கு இடது புறம் இருப்பதையும் Google map மூலம் எளிதாக காணலாம்.



அடுத்த மூன்று இழக்க எண்கள் கொண்ட நெடுஞ்சாலைகள்.

NH 136: தஞ்சாவூர் – பெரம்பலூர்.

இது போல மூன்று இழக்க எண்கள் கொண்ட சாலைகள் இவைகள் கிளை சாலைகள் என எடுத்து கொள்ளலாம். கிளை சாலை என்றால் இதன் முதன்மை சாலை எது என்று கேட்டால், அதன் மூன்று இலக்கத்தில் இறுதியில் உள்ள இரு இலக்க எண்கள் தான் அதன் முதன்மை சாலை.

இப்போது இந்த NH 136 கிளை சாலையின் முதன்மை சாலை NH 36 ஆகும்.

NH 532: கடலூர் – தலைவாசல் இதன் முதன்மை சாலை NH 32: சென்னை – தூத்துக்குடி ஆகும்.



அடுத்த மூன்றிலக்க எண்கள் உடன் ஆங்கில எழுத்துகள் இருப்பது.

உதாரணம்: NH 136B.

இவை கிளை சாலைகளில் சிறிய தூரம் மட்டுமே இருக்கும் சாலைகளுக்கு இந்த முறை வழங்கப்படும்.

NH 136B கும்பகோணம் – சீர்காழி சாலை 59 kms.


இதை போல NH 381A: சங்ககிரி – வெள்ளகோவில் 71 kms.

இப்படி தான் புதிய எண்கள் வகைப்படுத்தப்படுகிறது.


சரி இதனால் என்ன நன்மை, என்று கேட்டால். இதன் மூலம் ஒருவர் எளிதாக அவர் பயணித்து கொண்டு இருக்கும் சாலையை கண்டறிந்து விட முடியும்.

உதாரணமாக:

திருச்சி – சிதம்பரம் சாலை பழைய எண்: NH 227.

இந்த சாலையில் புதிதாக வரும் ஒருவர் இந்த சாலை எங்கு இருந்து எங்கே செல்கிறது என்று கண்டறிவது கடினம்.

இப்போது இந்த சாலையில் புதிய எண்ணுக்கு வருவோம்.

NH 81 : சிதம்பரம் – கோவை.

இப்போது இந்த புதிய எண் முறையை அறிந்த ஒருவர் எளிதாக சொல்லி விட முடியும் இந்த சாலை ஒற்றை படையில் உள்ளது, ஆகவே இது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி செல்கிறது.

உள்ளூர் வாசிகள் விட வெளி மாநிலம் செல்வோருக்கு இது மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும், இந்த எண் முறைகள் பழகி விட்டால் நெடுஞ்சாலை எண் வைத்தே எந்த மாநிலத்தில் தற்போது பயணித்த கொண்டு இருக்கிறோம் என்று அறிந்து கொள்ள முடியும்.