ரஜினி நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் 2005-ஆம் ஆண்டு வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் ‘சந்திரமுகி’. ‘சிவாஜி ப்ரொடக்ஷன்’ தயாரித்திருந்த இப்படத்தில் பிரபு, ஜோதிகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.
இப்படம் மலையாளத்தில் 1993-ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான ‘மணிசித்ரதாலு’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான அறிவிப்பை கடந்த 2020-ஆம் ஆண்டு நடிகர் ராகவா லாரன்ஸ், தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
சந்திரமுகி-2 படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு !
லாரன்ஸ் நடிக்கவுள்ள சந்திரமுகி-2 படத்திற்கான அறிவிப்பு வெளியான நிலையில், ‘சந்திரமுகியாக நடிக்க இருப்பது யார்? முதல் பாகத்தில் வந்த மலைப்பாம்பு இதிலும் வருமா?’ போன்ற பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்!
இந்நிலையில் ‘சந்திரமுகி 2’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே சந்திரமுகி இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார். முதன்மை கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கவுள்ளார்.
பாகுபலி இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்த சந்திரமுகி 2 படக்குழுவினர் மீண்டும் தமிழ் படத்துக்கு. மீண்டும் தமிழில் இசையமைக்கிறார் எம்.எம் கீரவாணி.
இந்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து படத்தின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.