அறந்தாங்கி அருகே இரால் பண்ணையில் வைத்து இலங்கைக்கு கடத்த முயற்சி செய்த சுமார் 110-கோடி மதிப்புடைய 100-கிலோ எடையுடைய பிரவுன் சுகர் மற்றும் 1-கோடியே ஐந்து லட்சம் மதிப்புடைய 874 கிலோ கஞ்சாவை திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கதுறை துறையினர் பறிமுதல் செய்தால் பரபரப்பு.
புதுக்கோட்டை மாவட்ட எல்லை பகுதியான மீமிசலில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.111.5 கோடி போதைப்பொருள்கள், திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட எல்லை பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக வந்த ரகசிய தகவலின் பேரில், திருச்சி மற்றும் ராமநாதபுரம் சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், சோதனை ஈடுபட்டனர். அப்போது மீமிசல் உப்பளம் அருகே நேற்றிரவு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த அமீர் சுல்தான் என்பவரது இறால் பண்ணையில் இருந்து ரூ.110 கோடி மதிப்புள்ள 100 கிலோ கஞ்சா ஆயில், ரூ.1.05 கோடி மதிப்புள்ள 874 கிலோ கஞ்சா மூட்டை உட்பட மொத்தமாக ரூ.111.5 கோடி மதிப்பிலான போதை பொருள் வைத்திருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், போதைப்பொருட்கள் பறிமுதல் செய்த அதிகாரிகள், ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்த இருவருடன் மீமிசல் அரசனகரிபட்டினம் பகுதியை சேர்ந்த இறால் பண்ணையின் வாட்ச்மேன் முஜிபுர் ரஹ்மான் உட்பட மூன்று பேரையும் பிடித்து வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள போதைப்பொருளின் உரிமையாளரை தேடி வருவதாக திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 100 கோடி மதிப்புள்ளான போதைப்பொருட்களை மத்திய சுங்கத்துறை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்த சம்பவம் அப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. கடற்கரை ஓரம் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்படும் எனவும், கடத்தலுக்கு மீனவர்கள் யாரும் உதவ வேண்டாம் என திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை முதன்மை ஆணையர் ரவிச்சந்திரன் எச்சரித்துள்ளார்.