தாய்லாந்து நாட்டில் சிக்கித் தவிக்கும் தனது மகனை மீட்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதறி அழுத தாய்…
கொடுமைக்காரர்களிடமிருந்து தனது மகனை மீட்க கண்ணீர் மல்க கோரிக்கை…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவிற்குட்பட்ட மஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் போதும்பொண்ணு தம்பதி. இவர்களுடைய இரண்டாவது மகன் தமிழ்ழகன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு நண்பருடன் தாய்லாந்து நாட்டிற்கு பணிக்காக சென்றுள்ளார்.
ஆனால் அந்த தனியார் நிறுவனம் தன் மகனை 20 மணி நேரம் ஓயாமல் பணிபுரிய செய்ய வலியுறுத்தி மேலும் துன்புறுத்தி வருவதாகவும் தாய் நாட்டிற்கு திரும்ப செல்ல வேண்டுமென்றால் ரூபாய் 4 லட்சம் பணம் கட்ட வேண்டுமென அந்த நிறுவனத்தினர் மிரட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் நிர்ணயிக்கும் அதிகப்படியான பணி நேரத்தை செய்யாவிட்டால் உணவும் வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக யாரிடமாவது தெரிவித்தால் கொலை மிரட்டலும் விடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மதிய வேளையில் மறைத்து வைத்திருந்த செல்போன் மூலம் பெற்றோர்களுக்கு தமிழ்ழகன் எனது பெற்றோரை தொடர்பு கொண்டு வருகிறார். மேலும் தான் பாதிக்கப்பட்டதற்கான வீடியோவையும் அனுப்பி உள்ளார்.
அதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் வழக்கறிஞரை அழைத்துக் கொண்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்று தன் மகனை மீட்டு தர வேண்டுமென பெற்றோர்கள் மனு அளித்தனர்.
தன்மகனை விரைவில் மீட்டு தர வேண்டுமென மனு அளித்த பிறகு தாய் கதறி அழுதார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெற்றோர்களுமான அளிக்க வந்த போது மதிய வேலையில் தாய்லாந்து நாட்டில் இருந்து தமிழ்ழகன் தாயிடம் செல்போனில் பேசினார். அம்மா கவலைப்படாதே நான் வந்து விடுகிறேன் என்று பேசும்போது தாய் கதறி அழுதபடியே செல்போனில் பேசினார்…