குழிபிறையில் சிசிடிவி கேமராக்கள் திறப்பு.
புதுக்கோட்டை
திருமயம் ஒன்றியம் குழிபிறையில் பசுமை குழிபிறை அமைப்பு மூலம் 64 கேமராக்கள் ரூ 15 லட்சம் மதிப்பீட்டில் பஸ்நிலையம், பல்வேறு வீதிகள்,கடைவீதி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஊராட்சித்தலைவர் அழகப்பன் தலைமை வகித்தார். பனையப்பட்டி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பசுமை குழிபிறை டிரஸ்ட் சேர்மன் ராமசுவாமி வரவேற்றார்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பொன்னமராவதி டி.எஸ்.பி அப்துல்ரகிமான் இயக்கி வைத்துப்பேசியதாவது., கண்காணிப்புக்கேமராக்கள் அமைப்பதால் சமுதாயத்தில் நடக்கும் குற்றங்கள் குறையும். அதையும் மீறி ஏதாவது குற்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் எதிரிகளை பிடித்து எளிதில் விசாரிக்கலாம். நீதிமன்றத்தில் இந்த பதிவுகளை ஆதாரமாக சமர்பிக்கலாம்.மற்ற ஊர்களுக்கு முன் மாதிரியாக இந்த குழிபிறை கிராமத்தில் அறக்கட்டளை நிதி உதவி செய்துள்ளது. இதே போல் மற்ற கிராமங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை கிராம மக்கள்,தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் விரைவில் அமைக்க வேண்டும். பொன்னமராவதி உட்கோட்டத்தில் இதுவரை 20 கிராமங் களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதியுள்ள எல்லா கிராமங்களில் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதனை மூன்றாவது கண் என்றே கூறலாம். என்றார். தொழில் அதிபர் திருப்பதி நன்றி கூறினார்.
கண்காணிப்பு காமிராக்கள் அமைத்து கொடுத்த பசுமை கூழிபிறை டிரஸ்ட் அமைப்பினருக்கு ஊராட்சி மன்ற தலைவர் அழகப்பன் நன்றி தெரிவித்தார்.