புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற இரண்டு இளைஞர்களை அப்பகுதி மக்கள் அதிகாலை மடக்கி பிடித்து அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்தனர்.
தகவல் அறிந்ததும் டவுன் போலீஸ்சார் வந்து இருவரையும் மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திருமயம் பகுதியை சேர்ந்த செல்வராஜ், வெங்கட் என்பது தெரிய வந்தது. இருவர் மீதும் வழக்கு பதிந்து போலீசார் இவர்கள் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் எதுவும் உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.