இசைஞானி இளையராஜாவின் மகள் திருமதி. பவதாரணி சற்று முன் காலமானார் .

511

🎬பவதாரணி, திரை பின்னணி பாடகி, இசையமைப்பாளர், இளையராஜவின் மகள், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி. இவர் அதிகளவில் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் மட்டும் பாடியுள்ளார். ஆனால், இவரது குரல் மிகவும் வித்யாசமானதாக இருக்கும். இவர் இளையராஜா இசையில் பாரதி படத்தில் பாடிய மயில்போல பொண்ணு ஒண்ணு பாடலுக்கு இவருக்கு சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.

ராசய்யா அப்படீங்கற படத்தில் இவர் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அந்தப்பாடல் பெரிய ஹிட்டானதையடுத்து, இவர் தொடர்ந்து தனது தந்தை மற்றும் சகோதரர்களின் இசையமைப்பில் பாடல்கள் பாடினார். தேவா, சிற்பி ஆகியோருக்கும் பாடியு இருக்கார்.

இவர் நடிகை ரேவதி இயக்கிய மித்ர் மை பிரண்ட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் இவர் தெலுங்கு பட உலகில் நுழைஞ்சார். இவர் ரேவதி இயக்கிய பிர் மிலேங்கே படத்திற்கும் இசையமைத்தார். இவர் வெள்ளிச்சி என்ற கிராமப்புற இசைக்கு நல்ல பெயர் வாங்கினார்.


அப்பாலே சபரிராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் ஒரு விளம்பர நிறுவன நிர்வாகி. இவர் சென்னை ரோசரி மெட்ரிக் பள்ளியில் படிச்சவர்.

அழகி படத்தில் இவர் பாடிய ஒளியிலே தெரிவது தேவதையா என்ற பாடல் படு ஹிட்டான பாடல். மேலும் இவர் பாடிய கல பாடல்கள் ஹிட்டானது. அதில் குறிப்பிடும்படியானவை, உல்லாசம் படத்தில் முத்தே முத்தம்மா, தனுஷ் நடித்த படத்தில் இவர் பாடிய ஹிட்டான பாடல் ஆத்தாடி, ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசப்பட்டு காத்திருக்கா டா என்பதாகும்.

இவர் வித்யாசமான குரல் வளம் கொண்டவர். இவரது குரலின் தனித்தன்மையே அவரது குரலை தனியாக அடையாளப்படுத்தி காட்டிவிடும்.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜாவின் மகள் பவதாரணி உடல்நலக்குறைவால் காலமானார். கல்லீரல் புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத மையத்தில் அவர் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.