புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன.
இதில் தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 163 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதேபோல் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 120 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் செந்தில் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரை சேர்ந்த நடராஜன் மகன் அருண், கோவிந்தராஜ் மகன் மருது, சோனை மகன் செல்வராஜ், சேப்பான் மகன் சுந்தரம் ஆகிய 4 மீனவர்களும், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரை சேர்ந்த கேசவன், குமார், முத்து, குணா, முருகேசன் ஆகிய 5 மீனவர்களும் என மொத்தம் 9 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று முன்எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.