புதுக்கோட்டை அருகே விவசாயி வெட்டிக்கொலை

1404

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா பட்டத்தூரணி கிராமத்தை சேர்ந்தவர் விஜய் அனுகூலம். இவரது மகன் முத்துநாதன். விவசாயியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆயிங்குடி வடக்கில் உள்ள தனது தென்னந்தோப்பிற்கு நேற்று இரவு சென்றார்.

இந்நிலையில், இன்று அதிகாலை ஆகியும் முத்துநாதன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை தேடி முத்துநாதனின் அண்ணன் ஆவுடையப்பன் தென்னந்தோப்பிற்கு சென்று பார்த்தார். அப்போது தோப்பில் முத்துநாதன் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் வெட்டியநிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதையடுத்து அவரது உடலை பார்த்து ஆவுடையப்பன் கதறி அழுதார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.