பொன்னமராவதி தாலுகா காரையூர் அருகே உள்ள ஈச்சம்பட்டியில்
கோழியை விழுங்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தாலுகா ஈச்சம்பட்டி கிராமத்தில் கோழியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது. காரையூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி செட்டிகளத்தை சேர்ந்த அடைக்கன் மகன் அடைக்கன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் அருகே கோழியை விழுங்கிய நிலையில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு கிடந்துள்ளது.
இதனை பார்த்த அடைக்கன் மறவாமதுரை கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று கோழியை விழுங்கி மலைப்பாம்பை பிடித்து
வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Source: ILLAYARAJA