📌வேகம் 110km/hr க்கான சோதனை ஓட்டம்📌
நாளை மறுநாள்(02/10/23) அன்று திருச்சி-புதுக்கோட்டை-காரைக்குடி(89கிமீ) வழித்தடத்தின் வேகம் 110km/hr ஆக அதிகரிப்பதற்கான அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
இதன்படி சோதனை ஓட்ட ரயிலானது 02/10/23 அன்று காலை 09:00 மணிக்கு திருச்சி சந்திப்பிலிருந்து புறப்பட்டு @121Km/hr வேகத்தில் இயக்கப்பட்டு வெறும் 40 நிமிடங்களில் 89கிமீ தூரத்தை கடந்து காரைக்குடி சந்திப்பிற்கு 09:40 மணிக்கே செல்லும். இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமான நிறைவுபெறும் பட்சத்தில் திருச்சி-புதுக்கோட்டை-காரைக்குடி வழித்தடத்தின் வேகம் (Section speed) 100 Km/hr லிருந்து 110Km/hr ஆக உயர்த்தப்படும்.
இதனால் நமது வழித்தடத்தில் இயங்கும் பல விரைவு ரயில்கள் 5 முதல்10 நிமிடங்கள் வரை எந்தவித தாமதமின்றி நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு முன்கூட்டியே புதுக்கோட்டையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 4-5 மாதங்களாக வேகம் அதிகப்பதற்கான பணிகள் தீவிரமான நமது வழித்தடத்தில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
Source: Pudukkottai Rail Users