புதுக்கோட்டையில் உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயணம்

256

புதுக்கோட்டையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு முத்து மீனாட்சி மருத்துவமனை சார்பில் இதயம் காக்க விழிப்புணர்வு நடை பயணம் மாவட்ட விளையாட்டு திடலில் இருந்து தொடங்கியது.

முன்னதாக முத்து மீனாட்சி மருத்துவமனை இயக்குனர் பெரியசாமி தலைமையில் விழிப்புணர்வு பேரணியை எஸ்பி வந்திதா பாண்டே தொடங்கி வைத்தார்.

டிஎஸ்பி ராகவி முன்னிலை வகித்தார் ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து முத்து மீனாட்சி மருத்துவமனையை சென்றடைந்தது.


இந்த பேரணி 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் செவிலியர் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி நடந்து வந்தனர்.