பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்

317

பிரபல நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 57. டப்பிங் பணியின் போது மாரடைப்பால் உயிர் பிரிந்தது. கண்ணும் கண்ணும், புலி வால் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். நடிகராக பரியேறும் பெருமாள், மருது, கொம்பன், ஜீவா, பைரவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்திலும் இவர் நடித்திருந்தார். திரைப்படம் மட்டும் அல்லாமல் சின்னத்திரையிலும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமடைந்தார். இவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.