புதிய பேருந்து நிலையம் விபத்தில் இருவர் காயம் :புதுக்கோட்டை

594

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் கான்கிரீட் மேற்கூரை 4வது முறையாக இடிந்து விழுந்தது 2 பேருக்கு பலத்த காயம்..

புதிய பேருந்து நிலையம் அறிவிப்பு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது.. அறிவித்த மற்ற இடங்களில் வேலை நடந்து வருகிறது..‌(புதுக்கோட்டை, அறந்தாங்கி தவிர)


பஸ் ஸ்டாண்டின் மேற்கூரை பெயர்ந்துவிழுந்து தாய், மகன் படுகாயம்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் காரைக்குடி பேருந்து நிற்கும் இடத்திற்கு முன்பு உள்ள கடையின் மேற்கூரை நேற்று திடீரென பெயர்ந்து விழுந்தது.

இதில் அங்கு நின்று கொண்டிருந்த செருவாவிடுதி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது தாயார் வெள்ளையம்மாள் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.