இரவு நேர பஸ் இயக்க கோரிக்கை…

354

அறந்தாங்கி நகரம் புதுக்கோட்டைக்கு அடுத்தப்படியாக 2வது பெரிய நகரமாக உள்ளது. இங்கு நகராட்சி அலுவலகம், தாலுகா, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பாலிடெக்னிக், அரசு மருத்து வமனை மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பல்வேறு பணிகளுக்காக அறந்தாங்கி வந்து செல்கின்றனர்.

ஆனால் நள்ளிரவு 12 மணிக்கு மேல் புதுக்கோட்டை செல்ல பஸ் வசதி இல்லை. காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி வர போதுமான பஸ் வசதி இல்லை. பயணிகள் நலனை கருத்தில் கொண்டு அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு பஸ் இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.