7 வயது சிறுவனுக்கு குவியும் பாராட்டு…

723

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி இந்திரா நகர் ஜமாத்தார்கள் மற்றும் திருமயம் வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பில் 7 வயதில் முழு குரானை மனப்பாடம் செய்த சிறுவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஜமாத் தலைவர் முகமது சரீப் தலைமை தாங்கினார். ஜமாத் நிர்வாகி முகமது அப்துல்லா வரவேற்றார்.

விழாவில், செய்யது முஹம்மது அப்துல் ரஜாக் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வாழ்த்தி பேசினார்.

விழாவில் 7 வயதில் குரானை மனப்பாடம் செய்த முஹம்மது ஹாஜா முய்னுதீனை பாராட்டி பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில் ஜமாத் தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.