புதுக்கோட்டை அருகே நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து சிகிச்சை பலனளிக்காமல் மூன்று நபர்கள் பரிதாப சாவு.
புதுக்கோட்டை அருகே பூங்குடியில் கடந்த 30ந் தேதி நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் வெடிகள் வெடித்து சிதறியதில் அந்த ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்த உரிமையாளர் மற்றும் 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர்
நேற்று இறந்தார் பலி 3 ஆக உயர்ந்தது.
புதுக்கோட்டை அருகே பூங்குடி கிராமத்தில் ஊருக்கு சற்று தள்ளி குடியிருப்பு பகுதிகள் இல்லாத இடத்தில் அரசு அனுமதி பெற்று நாட்டு வெடி தயாரிப்பு ஆலையை கோவிலூரை சேர்ந்த வைரமணி (வயது 44) என்பவர் நடத்தி வருகிறார். கோவில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வாண வேடிக்கைக்கு வெடிகள் மற்றும் நாட்டு வெடிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
இந்த ஆலையில் வெடி மருந்து தயாரிக்கும் கூடமானது சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த கட்டிடத்தில் நேற்று 7 பேர் வெடிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
வெடி விபத்து இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி இந்த கட்டிடத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடிகள் வெடித்து சிதறின. இதில் அங்கு பணியாற்றிய 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் தீக்காயத்தில் அலறி துடித்தனர். இதற்கிடையே வெடி விபத்தில் வெடிகள் நாலாபுறமும் வெடித்து சிதறின. இந்த பயங்கர சத்தம் அக்கம் பக்கம் கிராமங்கள் வரை கேட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
தீக்காயமடைந்து கிடந்தவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர் இந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருக்கோகர்னம் கம்மாளர் தெருவை சேர்ந்த வீரமுத்து வயது 30 மற்றும் கோவில்பட்டியைச் சேர்ந்த திருமலை வயது 30 இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதமாக இறந்து விட்டனர் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்