மிரட்டுநிலை அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு இனிப்பு, கார வகைகளை சாப்பிட்டு கொண்டே ஆட்சியருடன் உரையாடினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் காபி வித் கலெக்டர் என்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார்.
புதன்கிழமை (ஆக.30) நடந்த காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மிரட்டுநிலை அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு இனிப்பு, கார வகைகளை சாப்பிட்டு கொண்டே ஆட்சியருடன் உரையாடினர்.
அப்போது உங்களை ஐ.ஏ.எஸ் ஆக தூண்டியது என மாணவர்கள் கேட்டனர்.
இதற்கு, ஆட்சியர் மெர்சி ரம்யா, பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றால் கலெக்டராக ஆக வேண்டும் என்று சிறுவயதில் மனதில் ஏற்பட்ட தாக்கமே என்னை ஐஏஎஸ் அதிகாரியாக ஆக்கியது என்று வேடிக்கையாக பதில் அளித்தார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த புதிய முயற்சி, பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.