வாகனம் மோதி வாலிபர் பலி…

987

ஆலங்குடி தாலுகா கீழாத்தூர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் (28). காரைக்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பினார்.

திருமயம் பெல் நிறுவனம் அருகே வந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த கண்ணதாசன் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.