புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா,
நார்த்தாமலை பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி.
இவரது மகள் லத்திகா (19). இவர், புதுக்கோட்டை
அரசு கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி 3ம்
ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த
ஆக. 22ம் தேதி தாயுடன் ஏற்பட்ட மன வருத்தத்தில்
லத்திகா வீட்டில் யாரும் இல்லா நேரத்தில் விஷ
இலையை தின்று மயங்கி கிடந்துள்ளார்.
இதனை கண்ட குடும்பத்தினர் லத்திகாவை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லத்திகா சிகிச்சை
பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து கீரனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மரியதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.