புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணமேல்குடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சுமார் 32 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் உள்ளன. இதில் ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் மீன்பிடி தொழில் போக மற்ற நேரங்களில் இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் கடல் பாசி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பாசி வளர்ப்பு என்பது கடல் பகுதியில் மிதவை கம்புகளை மிதக்க விட்டு அதில் விதை பாசி கட்டி விட்டு 60 நாட்கள் சென்று விதை பாசி கட்டி விட்டு 60 நாட்கள் சென்று
அறுவடை செய்கின்றனர். இந்த பாசியானது அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும், உணவுப்பொருளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மிஞ்சிய கழிவுகள் உரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து அறுவடை செய்த பாசியை அதே பகுதியில் உலர வைத்து மதுரை, கோயம்புத்தூர், தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த பாசி வளர்க்க தமிழக அரசு மற்றும் மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. அதிக வருமானம் வரக்கூடியது என்பதால் இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆர்வத்துடன் பாசி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, பாசியை கொள்முதல் செய்ய அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.