தேவகோட்டையை சேர்ந்த பெண், கணவருக்கு தெரியாமல் இன்ஸ்டாகிராம் நண்பரை சந்திக்க சென்றபோது கொலை!

120

தென்காசி மாவட்டம், வலசை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் சாக்குப்பையில் கட்டப்பட்டு அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கடந்த 10-ம் தேதி மீட்கப்பட்டது. விசாரணையை துவங்கினர் கடையநல்லூர் போலீசார். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை காவல் நிலையத்தில் திருமணமாகி 4 மாதங்களே ஆன 19 வயதான வினோதினி என்ற பெண் காணாமல் போய் இருக்கும் வழக்கு நிலுவையில் உள்ளதும், அவரது கையில் இந்த எழுத்து பச்சை குத்தப்பட்டிருப்பதும் போலீஸாருக்கு தெரிய வந்தது.

ஆனாலும், சிவகங்கையைச் சேர்ந்தவர் ஏன் தென்காசி மாவட்டத்திற்கு வர வேண்டும் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை துவங்கினர். அதற்காக, வினோதினியின் செல்போன் கால் லிஸ்ட்டை எடுத்து ஆராய்ந்த போது வலசை கிராமத்தை சேர்ந்த மனோரஞ்சித் என்ற 23 வயது இளைஞர் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்தது.


இதனையடுத்து, மனோரஞ்சித்திடம் தங்களது பாணியில் விசாரணையை துவங்கினர் போலீஸார். அப்போது, இன்ஸ்டாகிராமில் வினோதினியுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதாகவும், ஆனால், அவர் வேறொருவரை திருமணம் செய்துக் கொண்டதாகவும் திருமணத்திற்கு பிறகும் இருவரும் இன்ஸ்டாவில் பழகி வந்ததாகவும் தெரிவித்தார். ஆனாலும், இன்ஸ்டாவில் மேலும் சில இளைஞர்களுடன் வினோதினி பழகி வந்தது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார் மனோரஞ்சித்.

ஆனாலும், மனோரஞ்சித் சமாதானமாகாததால், அவரை நேரில் சந்திப்பதற்காக கட்டிய கணவனிடம் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி விட்டு தென்காசிக்கு சென்றார் வினோதினி. காதலியை நேரில் கண்டதும் கோபத்தை மறந்த மனோரஞ்சித், அவரை டூவீலரில் ஏற்றிக் கொண்டு பல இடங்களுக்கு சுற்றி உல்லாசமாக இருந்துள்ளார். தனிமையில் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது வினோதினி நடத்தையில் மீண்டும் மனோரஞ்சித் சந்தேகப்பட இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்பொழுது, ‘என்னை நீ நம்பவில்லையா….?, அப்படி என்றால் என்னை நீ கொன்றுவிடு’ என யதார்த்தமாக வினோதினி கூறியுள்ளார். ஆத்திரத்தில் இருந்த மனோரஞ்சித்தோ அருகே கிடந்த கட்டையை எடுத்து வினோதினியின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சுயநினைவை இழந்த வினோதினி இறந்து விட்டதாக கருதிய மனோரஞ்சித், தனது நண்பர்கள் உதவியுடன் வினோதினியை சாக்கு மூட்டையில் வைத்து கட்டி கிணற்றில் வீசியுள்ளனர். மனோரஞ்சித்திற்கு உதவியதாக மகா பிரபு, பரத், மணிகண்டன் மற்றும் 17 வயது சிறார் ஒருவனையும் கைது செய்தனர் போலீஸார்