மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

443

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள சுந்தம்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி (35), தொழிலாளி. இவர் கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி ஆவாம்பட்டி உத்தமகுளம் என்ற இடத்தில் மின்மாற்றியை நிறுத்தம் செய்துவிட்டு அதில் பழுது நீக்குவதற்காக மின்கம்பத்தில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.


இதில் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு பொன்னமராவதி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கந்தசாமி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கந்தசாமிக்கு திலகம் என்ற மனைவியும், கபிலன் என்ற மகனும் உள்ளனர்.