விராலிமலை: பயங்கர விபரத்தில் 15 பேர் படுகாயம்

846

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை எஸ். மலையனூரை சேர்ந்தவர் கண்ணன் (60). இவர் தனது உறவினர்களான மாணிக்கவேல் (48), இவரது மனைவி ராஜேஷ்வரி (45), கல்வராயன் (42), சத்யராஜ் (33), இவரது மனைவி நந்தினி (29) உள்பட 26 பேருடன் தேனி மாவட்டத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு ஒரு வேனில் சென்றார்.


பின்னர் அவர்கள் சாமி தரிசனம் முடிந்து நேற்று மதுரை வழியாக தங்களது சொந்த ஊருக்கு அதே வேனில் திரும்பி சென்று கொண்டு இருந்தனர். வேனை கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கொட்டார குப்பத்தை சேர்ந்த அய்யப்பன் (34) என்பவர் ஓட்டி சென்றார்.

இந்நிலையில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறிச்சிப்பட்டி இணைப்பு சாலை அருகே வேன் சென்றபோது திடீரென பின்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டை மீது மோதி கவிழ்ந்தது. இந்தவிபத்தில் வேனில் பயணம் செய்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறினர்.

இதற்கிடையில் அங்கு வந்த இலுப்பூர் போலீஸ் டிஎஸ்பி காயத்ரி மற்றும் விராலிமலை போலீசார் காயமடைந்த 15 பேரை மீட்டு திருச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.