மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை தட்டிய நாமக்கல் வீரர்…

551

புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் நாமக்கல்லை சேர்ந்தவர் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் பெற்றார்.

புதுக்கோட்டையில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் மாநில அளவிலான மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்திற்கான ஆணழகன் போட்டி புதுக்கோட்டை மேலராஜவீதி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் 34 மாவட்டங்களைச் சேர்ந்த 216 வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர் மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.