புதுக்கோட்டை- அறந்தாங்கி சாலை நான்குவழிச் சாலையாகுமா?பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

1908

புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் பிரதான சாலையை நான்கு வழிச் சாலையாகத் தரம் உயர்த்தி விரிவாக்கம் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு பெரிய நகரங்களாக இருப்பவை, புதுக்கோட்டையும், அறந்தாங்கியும். இவை இரண்டும்தான் உள்ளாட்சி அமைப்புகளின்படி, நகராட்சிகள்.

இரு இடங்களுக்கும் இடையே, வெறும் 36 கி.மீ. தொலைவு மட்டுமே. ஆனால், பேருந்திலோ, காரிலோ சென்றால் குறைந்தபட்சம் ஒரு மணி நேரப் பயணம்.

இரு இடங்களுக்கும் இடையே, வெறும் 36 கி.மீ. தொலைவு மட்டுமே. ஆனால், பேருந்திலோ, காரிலோ சென்றால் குறைந்தபட்சம் ஒரு மணி நேரப் பயணம். இதற்கான முக்கிய காரணமாக ஓட்டுநர்கள் தெரிவிப்பது, இந்தச் சாலையிலுள்ள 32 வேகத்தடைகள். அதனைத் தொடர்ந்து, வாகனப் பெருக்கத்துக்கு ஏற்ப சாலை விரிவாக்கப்படாமல், சில ஊர்ப் பகுதிகளில் ஒற்றைச் சாலையைப் போன்போன் காணப்படுகிறது.

ஏற்கெனவே இந்தப் போக்குவரத்து நேரப் பிரச்னை காரணமாக பால் கெட்டுப் போவதாகவும், எனவே, ஆவின் பால் குளிரூட்டும் மையத்தை அறந்தாங்கியில் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

இந்த நிலையில், புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.

திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து, விராலிமலை, புதுக்கோட்டை, அறந்தாங்கி வழியாக கிழக்குக் கடற்கரைச் சாலையை இணைக்கும் 4 வழிச்சாலைத் திட்டம் ஏற்கெனவே யோசிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக முசிறி- விராலிமலை (நெடு.எண்- 71), விராலிமலை- புதுக்கோட்டை (நெடு. எண்- 71), புதுக்கோட்டை- அறந்தாங்கி (நெடு.எண்- 26), அறந்தாங்கி- கட்டுமாவடி (நெடு.எண்-145) ஆகிய 4 பகுதிகளில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, உலக வங்கியில் நிதி பெற்று சாலை விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், புதுக்கோட்டை- அறந்தாங்கி சாலையைத் தவிர்த்து ஏனைய 3 பகுதிகளுக்கும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டுள்ளது.

திட்டமிட்டு இந்தச் சாலையை விரிவாக்கம் செய்வதை விட்டிருக்கிறார்கள் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த விரிவாக்கத்துக்கு திட்டமிட்டால், மிகக் குறுகலான சாலையில் உள்ள வீடுகள், கடைகள் பாதிக்கப்படும் என்பதால், அரசியல்வாதிகளும் இதனை வாக்குவங்கியாகப் பார்த்து கைவிட்டுவிட்டதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை- அறந்தாங்கி சாலை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டால், கடற்கரைப் பகுதியிலிருந்து மீன் வர்த்தகமும், இருபுறமும் உள்ள விவசாய விளைபொருள்களும் எளிதில் அடுத்த மாவட்டத்துக்குச் செல்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

வேகத்தடைகள் இல்லாமல் போகும்பட்சத்தில், அறந்தாங்கியிலிருந்து மட்டுமன்றி, கடலோர எல்லைப் பகுதியில் இருந்தும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து செல்ல முடியும்.

இவற்றைத்தாண்டி, உயர்கல்வி பயில புதுக்கோட்டை வந்து செல்லும் மாணவர்களுக்கும், வேலைக்காக புதுக்கோட்டை வந்து செல்லும் தொழிலாளர்களுக்கும் வசதியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

சாட்டுகின்றனர்.

இந்த விரிவாக்கத்துக்கு திட்டமிட்டால், மிகக் குறுகலான சாலையில் உள்ள வீடுகள், கடைகள் பாதிக்கப்படும் என்பதால், அரசியல்வாதிகளும் இதனை வாக்குவங்கியாகப் பார்த்து கைவிட்டுவிட்டதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை – அறந்தாங்கி சாலை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டால், கடற்கரைப் பகுதியிலிருந்து மீன் வர்த்தகமும், இருபுறமும் உள்ள விவசாய விளைபொருள்களும் எளிதில் அடுத்த மாவட்டத்துக்குச் செல்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

வேகத்தடைகள் இல்லாமல் போகும்பட்சத்தில், அறந்தாங்கியிலிருந்து மட்டுமன்றி, கடலோர எல்லைப் பகுதியில் இருந்தும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து செல்ல முடியும்.

இவற்றைத்தாண்டி, உயர்கல்வி பயில புதுக்கோட்டை வந்து செல்லும் மாணவர்களுக்கும், வேலைக்காக புதுக்கோட்டை வந்து செல்லும் தொழிலாளர்களுக்கும் வசதியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

எனவே, முசிறி முதல் கட்டுமாவடி வரை (கிழக்குக் கடற்கரைச் சாலை வரை) திட்டமிடப்படும் 4 வழிச்சாலைத் திட்டத்தின்போதே, புதுக்கோட்டை – அறந்தாங்கி சாலையையும் 4 வழிச்சாலையாக விரிவுபடுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.