ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைகேட்பு முகாம்கள் நாளை ஆக. 12 (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாம்களில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்க்கை, நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்டவை குறித்தும் பொது விநியோகத் திட்டத்திலுள்ள குறைபாடுகள் குறித்தும் குடும்ப அட்டைதாரர்கள் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் மெர்ஸி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.