பூமீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்…

389

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கடியாபட்டி காணபேட்டையில் பிரம்ம வித்யாம்பாள் உடனுறை பூமீஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி மாத திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.

இதனை தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

இதையடுத்து விநாயகர், முருகன் சமேத வள்ளி- தெய்வானை, பூமீஸ்வர சுவாமி, பிரம்ம வித்யாம்பாள் அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியசுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து விநாயகர் தேரை பக்தர்கள் முன்னே இழுத்துச் செல்ல அதன் பின் மற்ற தேர்களை பக்தர்கள் எழுத்து சென்றனர்.

தேர்களை முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) தீர்த்தவாரி, மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை (செவ்வாய்க்கிழமை) தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.