தந்தை வாங்கிய கடனுக்காக மகளை கடத்தி சென்ற ஊழியர்

532

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே தந்தை வாங்கிய கடனுக்காக 11 வயது மகளை கடத்திச் சென்ற நிதி நிறுவன ஊழியரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மருதூரைச் சேர்ந்த வனத்துராஜா என்ற கூலித் தொழிலாளி, கீரனூரில் உள்ள முத்தூட் நிதி நிறுவனத்தில் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், வனத்துராஜா ஜூன் மாதத்திற்கான 2 ஆயிரத்து 500 ரூபாய் தவணையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. தவணை தொகையை வசூல் செய்ய நிதி நிறுவன ஊழியர் விக்னேஷ் என்பவர் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கு வனத்துராஜா இல்லாத நிலையில், அவரது 11 வயது மகளை கடத்திச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. அத்துடன், தவணைத் தொகையை செலுத்தினால் சிறுமியை விடுவிப்பதாக அந்த ஊழியர் மிரட்டிதாகவும் கூறப்படுகிறது

இந்த புகாரின் அடிப்படையில் தனியார் நிதி நிறுவன ஊழியர் விக்னேஷை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தனியார் நிதி நிறுவனங்கள் பணம் வசூல் செய்வதை வரைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இதுபோன்று வரம்பு மீறும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.