பொன்னமராவதி அருகே தேனிமலையில் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. போலீசார் விசாரணை.

397

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை ஊராட்சி சங்கம்பட்டியைச் சேர்ந்த அடைக்கண் என்பவரின் மகன் பெத்தான் என்ற கருத்தசாமி வயது 55. இவருக்கு திருமணமாகி ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் தேனிமலையில் திருமணம் செய்து கொடுத்த தன் மகள் முத்துலட்சுமியை பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சங்கம்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது பிள்ளையார் கோவில் பின்புறம் உள்ள பாலத்தில் மோதி தலை மற்றும் வாயில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பொன்னமராவதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பொன்னமராவதி போலீசார் இறந்த கருத்தசாமியின் உடலை மீட்டு பொன்னமராவதி வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு உடனுக்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source:ILLAYARAJA ALAGU PMV