புதுடில்லி : ‘நிதி ஆயோக்’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஏழைகள் அதிகமுள்ள மாவட்ட பட்டியலில், தமிழகத்தின் புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்கள் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில், 2015-2016ம் ஆண்டில், 4.16 சதவீதமாக இருந்து, 2019-2021ம் ஆண்டில், 4.52 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும், புதுக்கோட்டை மாவட்டம், 4.63 சதவீத ஏழைகளுடன், முதலிடத்தில் உள்ளது.
புதுக்கோட்டையை வளர்ச்சியடைய தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்.. #புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமையின் அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.
என்று மாறும் எங்கள் நிலை? புதுக்கோட்டை அனைத்து நிலையிலும் (அம்சங்களிலும்) வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இங்கு போதுமான தொழிற்சாலைகளை தொடங்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.