புதுக்கோட்டை வழித்தடத்தில் மாற்றம்!!!

637

📢புதுக்கோட்டை பயணிகள் பணிவான கவனத்திற்கு திருச்சி சந்திப்பில் நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக புதுக்கோட்டை வழித்தடத்தில் இரயில் சேவைகளில் மாற்றம்📢

1. வரும் வியாழன்(27/07/23) அன்று
புதுக்கோட்டையிலிருந்து காலை 07:50 மணிக்கு புறப்படும் 06126/காரைக்குடி-திருச்சி சிறப்பு பயணிகள் ரயில் காரைக்குடி – குமாரமங்கலம் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த ரயில் குமாரமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து காலை 08:30 மணிக்கு புறப்படும்

2. வரும் வியாழன் கிழமை 27/07/23 அன்று திருச்சியிலிருந்து தினசரி மாலை 06:15 மணிக்கு புறப்படும் 06125/திருச்சி-காரைக்குடி சிறப்பு பயணிகள் ரயில் குமாரமங்கலம் – காரைக்குடி ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த ரயில் திருச்சியிலிருந்து 06:15 மணிக்கு புறப்பட்டு #குமாரமங்கலம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்

3. வரும் 30/07/23, 31/07/23, 01/08/23 ஆகிய தேதிகளில்
06829/30 மானாமதுரை – திருச்சி – மானாமதுரை DEMU ரயில் இருமார்கங்களிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

4. வரும் 30/07/23 ஞாயிறு கிழமை அன்று புதுக்கோட்டையிலிருந்து மதியம் 12:20 மணிக்கு புறப்பட வேண்டிய 20895/ராமேஸ்வரம் – புவனேஸ்வர் வாராந்திர வண்டி மாற்றுபாதையான காரைக்குடி – திருவாரூர் வழியாக இயக்கப்படுகிறது.

5. வரும் 01/08/23 செவ்வாய் கிழமை அன்று புதுக்கோட்டைக்கு மாலை 05:15 மணிக்கு வரவேண்டிய 22536/பனாரஸ் – ராமேஸ்வரம் வாராந்திர வண்டி மாற்றுபாதையான திருவாரூர் – காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது.

6. வரும் 01/08/23 செவ்வாய் கிழமை அன்று சென்னையிலிருந்து மதியம் 03:45 மணிக்கு புறப்படவேண்டிய 12605/சென்னை எழும்பூர் – காரைக்குடி #பல்லவன் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது

Thanks : Pudukkottai Rail Users