இன்று (ஜூலை 18) தமிழ்நாடுநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்நெடுப்பில் பள்ளி மாணவர்கள் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரை தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு மாவட்ட அளவில் நடத்தப்பட்ட தமிழ்நாடு நாள் சிறப்பு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார் உயர்திரு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா MBBS MLA அவர்கள்.
இந்நிகழ்வின்போது மதிப்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மெர்சிரம்யா IAS அவர்களும், நகர் மன்ற தலைவர் திருமதி.திலகவதி செந்தில் அவர்களும் அரசு அதிகாரிகளும், ஆசிரியப் பெருமக்களும் உடன் கலந்துகொண்டனர்.