ஒடிசா மாநிலத்தில் விரைவு ரயில் கவிழ்ந்து விபத்து

550

ஒடிசாவின் பாலாசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் கவிழ்ந்து கோர விபத்து; பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

வனப்பகுதியில் தடம் புரண்ட கோரமண்டல் ரயில்… கோர விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு..

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது; பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

வனப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்பு பணிகளில் தொய்வு

கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் புவனேஸ்வரில் இருந்து 21 கி.மீ தொலைவில் 7 பெட்டிகள் கவிழ்ந்து விபத்து;

வனப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்பு மற்றும் நிவாரணப்பணியில் தாமதம் ஏற்படுவதாக தகவல்

*முதல்வர் ஸ்டாலின் அவசர அழைப்பு*

*கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவில் விபத்தில் சிக்கியது.*

*இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. அந்த ரயிலில் தமிழர்கள் பலர் பயணித்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.*

*இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் தொலைப்பேசியில் பேசியிருக்கிறார். தேவையான உதவிகளை செய்யத் தயார் என்று முதல்வர் உறுதியளித்திருக்கிறார்.*

*ரயில் விபத்து அவசர கால கட்டுப்பாட்டு எண் அறிவிப்பு*

*ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அவசரகால கட்டுப்பாட்டு அறை எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.*

*அதன்படி, விரைவு ரயிலில் பயணித்தோரின் விவரம் அறிய 044-2535 4771, 044 – 2533 0952, 044 – 2533 0953 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விபரங்களை கேட்கலாம்.*

*விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்க 32 பேர் அடங்கிய மீட்பு குழு சம்பவ இடத்துக்கு விரைகிறது. விபத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.*