ஆத்மநாதசுவாமி கோவிலில் வருகிற 23-ந் தேதி தேரோட்டம்…

505

திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவிலில் மாணிக்கவாசகர் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா வருகிற 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி மாணிக்கவாசகர் சுவாமி தினமும் காலை, மாலை இருவேளையும் வெவ்வேறு வாகனங்களில்

வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

நேற்று வெள்ளி சூரியபிரபை வாகனத்தில் மாணிக்கவாசகர் வீதியுலா வந்தார். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக 21-ந் தேதி இரவு குருத்தோலை சப்பரத்தில் வெள்ளி இடப வாகனத்தில் சிவபெருமான் அலங்காரத்தில் வீதியுலா நடைபெறுகிறது.

இதையடுத்து 23-ந் தேதி காலை 10 மணியளவில் தேரோட்டமும், 24-ந் தேதி இரவு மணமகள் வெள்ளி ரதமும், 25-ந் தேதி அதிகாலை உபதேச காட்சியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.