மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு!

769

6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சருடனான ஆலோசனைக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!


ஏற்கனவே வெயிலின் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போன நிலையில், மீண்டும் ஒத்திவைக்கபட்டுள்ளது

ஜூன் 7 பள்ளிகள் திறக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த தேதி மாற்றப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைப்பது தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி. 6 -12ம் வகுப்புக்கு ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,1 முதல் 5ம் வகுப்புக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.