புதுக்கோட்டை நகரத்தில் போடப்பட்ட புதிய சாலையால் மக்கள் அதிர்ச்சி.

756

புதுக்கோட்டை சாந்தநாத சாமி கோவில் அருகே உள்ள மண்டபம் முன்பாக நிறுத்தப்பட்ட காரை அகற்ற சொல்லாமல் தார் ரோடு போட்ட “சபாஷ்” ஒப்பந்தக்காரர் வைரலாகும் படங்கள்

புதுக்கோட்டை நகரத்தில் தற்போது பழைய சாலைகளை அகற்றமாலே புதியதாக அதன் மேல சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.. இந்நிலையில் புதுக்கோட்டை நகரத்தில் மைய பகுதியில் உள்ள சாந்தநாதசுவாமி திருக்கோயில் முன் புறம் உள்ள பகுதியில் நேற்று இரவு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

இதில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் அகற்றமாலே அந்த சாலை போடப்பட்டுள்ளது.. தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது..