புதுகை அரசு கிளை அச்சகத்தில் இனி பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பிக்கலாம்…

692

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்கக இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2023-24ம் நிதியாண்டுக்கான எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கையின்போது செய்தித் துறை அமைச்சர் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்ககம் சென்னை, மதுரை, திருச்சி அரசு கிளை அச்சகங்களில் இப்போது துணை விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன.

மதுரை, திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் சென்றுவர ஏற்படும் கால விரயம் மற்றும் பொருள் விரயம் தவிர்க்கப்படுவதற்காக,பொதுமக்களின் விருப்பத்தின்பேரில் புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி பொதுமக்கள் நலனுக்காக புதுகை அரசு கிளை அச்சகத்தில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்ய அரசிதழ் பெற்றிட கட்டணத்தை இசலான் மூலம் செலுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு விண்ணப்பங்கள் கட்டணம் ஏதும் இல்லாமல் பெறப்படும். பொது மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.