கொத்தமங்கலம் அருகே அருகே மின்னல் தாக்கி இளம் பெண் பரிதாப சாவு

699

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி ஒத்தாங்கொல்லை பகுதியை சேர்ந்தவர் கோபு. இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வித்யா (வயது 31). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 வயதில் பவியாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.

நேற்று மாலை கொத்தமங்கலம் பகுதியில் கன மழை பெய்தது. பெண் பலி வித்யா உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியவர் மழை வரும் முன்பு வீட்டு வாசலில் நின்ற மரங்களில் இருந்து கொட்டிய காய்ந்த இலைகளை கூட்டிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகில் நின்ற புளிய மரத்தில் தாக்கிய மின்னல் அருகில் நின்ற வித்யாவையும் தாக்கியுள்ளது.


இதில் வித்யா உடல், நகைகள் கருகியது. மின்னல் தாக்கியதில் சுருண்டு விழுந்த வித்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார் இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வருவாய்த்துறையினர் மற்றும் கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.