அறந்தாங்கி கீழாநிலைக்கோட்டை ஶ்ரீஅரியநாயகி திருக்கோவில் கும்பாபிஷேக விழா

633

கலை கட்டியது புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலைக்கோட்டை ஶ்ரீஅரியநாயகி திருக்கோவில் விழா

பக்தர்கள் புடை சூழ முதல் கால யாகசாலை பிள்ளையார்பட்டி பிச்சை குழுக்கள் தலைமையில் துவங்கியது.

அதனைத் தொடர்ந்து நாட்டிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் அன்னதானம் நடைபெற்று வருகிறது.

வரும் வியாழக்கிழமை அன்று நடைபெறும் கும்பாபிஷேகத்தின் துவக்க நிகழ்வுகளை பார்க்க தற்போது ஏராளமானோர் மாவட்டம் முழுவதிலிருந்தும் ,வெளி மாவட்டங்களில் இருந்தும் வரத்து வங்கி இருக்கின்றனர்.

வெளிநாடுகளில் வாழும் பக்தர்களும் தற்போது நிகழ்வுகளில் கலந்து கொண்டிருப்பது பார்க்க முடிந்தது.

ஆற்றல் மிகு ஆலயம் !

அன்னைஆற்றலின் அழைப்பு!
இந்த நூற்றாண்டின் மிகப்பிரமாண்டமான படைப்பான முழுமையான கற்கோவில் ,கும்பாபிஷேகம்!
மனிதனின் படைப்பிலேயே மிக உன்னதமானது உயர்வானது கோவில்.
மனிதனின் பரிணாம உள்ளுணர்வு வளர்ச்சியின் உயர்வான வெளிப்பாடு கோவில்.
கால பெருவெள்ளத்தில் வாழ்ந்த மனிதர்களின் பல்வேறு வகையான உள்ளமலர்ச்சியின் வெளிப்பாடாக பல்வேறு அமைப்புகள், கோவில்கள் படைக்கப்பட்டிருக்கின்றன.
பிரபஞ்ஜ காலபெருவெள்ளத்தில் எத்தனையோ ஆலயங்கள் மறைந்தும் போயிருக்கின்றன.
எத்தனையோ ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டு இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றன.


பல ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டு இன்றும் அதன் உன்னதம் காக்கப்பட்டு வருகிறது.
இதோ
புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலைக்கோட்டையில் ஸ்ரீ அரியநாயகி அம்மன் ஆலயம் அங்கு வாழும் பெருமக்களின் உன்னத வெளிப்பாடாக முற்றிலும் கர்கோவிலாக பிரமாண்டமாக படைக்கப்பட்டிருக்கிறது.

தென்னிந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய கற்கோவிலை படைத்திருக்கிறார்கள் இம் மக்கள்.
ராஜகோபுரம் முதல் அனைத்துமே கருங்கற்களால் மிகுந்த கலை நயத்தோடு அமைக்கப்பட்டு இந்த நூற்றாண்டின் அற்புதமாக கம்பீரமாக காட்சியளிக்கிறது.
பழமை வாய்ந்த இந்த கோவிலின் தற்போதைய உன்னதமான படைப்பை ,கம்பீரத்தை ,ஆற்றலை காணவும், பெறவும் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வரதுவங்கி இருக்கின்றனர்.


இந்த நூற்றாண்டின் மனித குலத்தில் உன்னத வழிபாட்டுதளமாக விரிவாக போகும் இந்த கோவிலின் மகா கும்பாபிஷேகம் வரும் ஆனி மாதம் 14ஆம் நாள் 29. 6 .2023 வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடைபெற இருக்கிறது.
ஸ்ரீ அரியநாயகி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ கன்னிமூல கணபதி, ஸ்ரீ நர்த்தன விநாயகர் ,ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை, ஸ்ரீ கருப்பர் ,ஸ்ரீ பைரவர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ முனீஸ்வரர் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் குடமுழுக்கு மிகப் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.
இந்த பெரும் படைப்பு ஸ்தலத்தில் மிகப்பெரிய அன்னதானமும் பல்வேறு நிகழ்ச்சிகளும் ,கொண்டாட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.


இந்த ஆலய கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை துவக்கம் வரும் ஞாயிறு 25 .6. 2023 அதிகாலை ஐந்தரை மணிக்கு ஆரம்பிக்க இருக்கிறது.
தமிழகம் முழுவதும் இல்லாமல் ,நாடு முழுவதும் ,உலகம் முழுவதும் இருக்கும் அன்னை அரியநாயகி அம்மனின் பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தர இருப்பதால்.
அதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி கோயில் மக்களும் , தமிழக அரசும் இணைந்து மிக சிறப்பாக செய்து வருகிறது.
வாருங்கள், இந்த நூற்றாண்டில் மிகப் பிரம்மாண்டமான உன்னத மனித குலத்தின் படைப்பாக திகழப்போகும் இக் கற்கோவிலின் ஆற்றலை உணரவும், பகிரவும், உயர்நிலை பெறவும்.

பேருந்து வழித்தடம்: காரைக்குடி- அறந்தாங்கி வழித்தட பயணத்தில் கீழாநிலை கோட்டை.