தனியார் பள்ளியின் 4 மாணவர்கள் வந்த இரு சக்கர வாகனம் – கார் மோதிய விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழப்பு.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நடந்த கோர விபத்தில் பைக்கில் சென்ற இரு பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மதுரை – தொண்டி நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் – கார் மோதிய விபத்தில் சகோதரர்கள் உதய பிரசாத் (15), சூரிய பிரசாத் (13) ஆகிய 2 மாணவர்கள் பலியான நிலையில், மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
ஒரே இருசக்கர வாகனத்தில் 4 பேர் சென்ற நிலையில், கார் மோதி இருவர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற இரு மாணவர்கள் சிவகங்கை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.