புதுக்கோட்டை தொகுதியில் ‘ஊராட்சி தோறும் இல்லம் தேடி எம்.எல்.ஏ’: சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா துவக்கினார்

637

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் ஊராட்சி தோறும் இல்லம் தேடி எம்.எல்.ஏ. என்ற நிகழ்வினை சட்ட மன்ற உறுப்பினர் வை.முத்துராஜா துவங்கி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆணைக்கிணங்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலோடு புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் ஒவ்வொரு ஊராட்சிகளில் இல்லம் தேடி எம்எல்ஏ என்ற நிகழ்வை மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு நிறைவேற்றி வரும் வகையில் புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் முதல் கட்டமாக வார்டு எண் 1ல் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா நகராட்சி நிர்வாக தூய்மை பணியாளர்கள் அதிகாரிகளுடன் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றக்கூடிய பணிகளை துறை சார்ந்த அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார்.

மேலும் உடன் வருகை புரிந்த துப்புரவு பணியாளர் அதிகாரிகளிடம் மழைக்கால முன்னெச்சரிக்கை நடக்கவடிக்கையாக மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள் பழனிவேல், மதியழகன், பால்ராஜ் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.