புதுக்கோட்டை மாவட்டம் வளையன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர். இவர் காரையூரில் உதவிமின் பொறியாளராக பணியாற்றிவந்தார்.
இந்நிலையில் நேற்று வேலை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது குலமங்கலம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த காவல்துறையினர் மனோகர் உடலை கைப்பற்றி திருமயத்திற்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை செய்து வருகின்றனர்.